உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழவேரி மலையில் முருகன் கோவில் கட்டும் பணி தீவிரம்

பழவேரி மலையில் முருகன் கோவில் கட்டும் பணி தீவிரம்

பழவேரி:பழவேரி மலை மீது முருகன் கோவில் கட்டுமா னப் பணி நடக்கிறது. பழவேரி மலை உச்சியின் ஒரு பகுதியில் பாறை கல்லில் தடம் பதிந்த ஒரு சுவடு காணப்படுகிறது. அது முருகபெருமானின் காலடி சுவடு என நம்பும் அப்பகுதியினர், கார்த்திகை மாதம், கிருத்திகை நாளில், தீபவிளக்கு ஏற்றி வழிபட்டு வருகின்றனர். அப்பகுதியில் முருகன் கோவில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர். அதன்படி, பழவேரி மலை உச்சியில் பழவேல் முருகன் சன்னிதி ஏற்படுத்த கடந்த ஆண்டு ஜனவரியில் பல்வேறு பூஜைகளுடன் கோவில் கட்டுமானப் பணி துவங்கியது. தற்போது உற்சவருக்கான கருவறை மற்றும் மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை