உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குதிரைக்கால் மடுவில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்

குதிரைக்கால் மடுவில் மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்

காஞ்சிபுரம்: குதிரைக்கால் மடுவு குறுக்கே, உயர்மட்ட பாலம் அமைக்க கட்டுமான பணி துவக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் இருந்து, சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், பிரதான ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, வையாவூர், ஒழையூர், பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிட்டியம்பாக்கம் கிராமம் வழியாக சென்னை-- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை மற்றும் வேலுார், பெங்களூரு ஆகிய பகுதிக்கு செல்கின்றனர். இந்த சாலை குறுக்கே, குதிரைக்கால் மடுவு தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் மீது, மழைக்காலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. வையாவூர்- சிட்டியம்பாக்கம் இடையே செல்லும் குதிரைக்கால் மடுவில், உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை ஏற்று, ஊரக வளர்ச்சி துறையினர், மாநில சிறப்பு உதவி நிதியின் கீழ், 7.76 கோடி ரூபாயில் உயர் மட்ட புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு பில்லர் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது. இந்த உயர் மட்ட பாலப்பணிகள் ஓராண்டிற்குள் நிறைவு பெற்று வாகன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி