வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், வளர்ச்சி திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.நல்லோர் வட்ட கிராம கள பொறுப்பாளர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகள். நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து ஊராட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருடன் கலந்தாலோசனை செய்யப்பட்டன.நல்லோர் வட்ட கிராம களப் பொறுப்பாளர்கள், ஊராட்சி முன் கள தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.