மாநகராட்சி ஊழியர் விபத்தில் பலி
மேல்மருவத்துார், லாரி மீது பைக் மோதிய விபத்தில், சென்னை மாநகராட்சி ஊழியர் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 46. இவர், சென்னை மாநகராட்சி, அடையாறு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, தன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், புலியனுார் கிராமத்திற்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில், செய்யூர் - வந்தவாசி சாலையில் சென்றார்.சோத்துப்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், எதிரே வந்த 'அசோக் லேலண்ட்' லாரியின் டயரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனசேகரன் உயிரிழந்தார்.