பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை அமைக்க கவுன்சிலர் மனு
காஞ்சிபுரம், செப். 21-காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை அமைக்க வேண்டும் என, மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா சம்பத், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். மனு விபரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. இதனால், பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, ஏற்கனவே கோவில் மதில்சுவர் அருகில் இருந்த கழிப்பறை அகற்றப்பட்ட இடம், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதே இடத்தில் மீண்டும் கழிப்பறை அமைக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.