உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஒன்றிய பொது நிதியில் பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

 ஒன்றிய பொது நிதியில் பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் பொது நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம், வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், துணை தலைவர் சேகர் மற்றும் வாலாஜாபாத் பி.டி.ஓ., கோமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் கான்கிரீட் சாலை, மழைநீர் வடிகால்வாய், சிறுபாலம் மற்றும் குடிநீர் வசதி மேம்படுத்துதல் போன்றவை குறித்து பேசினர். மேலும், வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சிகளில், ஆறு மாதங்களாக பொது நிதியின் கீழ், பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும், பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக தேர்வு செய்த பல பணிகள், ஊரக வளர்ச்சித் துறையின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் உத்தரவு கிடைக்கப் பெற்று நிதி விடுவித்ததும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் கூறினார். பருவமழை தீவிரம் அடைய உள்ளதால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்துதல் குறித்து கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை