மேலும் செய்திகள்
கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு மீட்பு
15-Mar-2025
காஞ்சிபுரம், :சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று, நேற்று, காலை 5:30 மணியளவில் வேலாத்தம்மன் கோவில் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தது அப்போது, மூடி இல்லாத மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் பசு தவறி விழுந்து விட்டது. வெளியேற முடியாமல் பசு கத்தியது. பசுவின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பசுவை மீட்க முயற்சித்தனர்.காலை 6:00 மணிக்கு காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படை குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பின், உயிருடன் பசுவை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
15-Mar-2025