உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விரிசல் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையம்

விரிசல் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், கருவேப்பம்பூண்டி ஆகிய கிராமத்தை சேர்ந்தோர் தினமும் வந்து செல்கின்றனர். துணை சுகாதார நிலைய கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மழை காலங்களில் துணை சுகாதார நிலையத்தில் உள்ள பதிவேடுகள், மருத்துவ உபகரணங்கள் பாழாகி வருகிறது. எனவே, கருவேப்பம்பூண்டி அரசு துணை சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை