உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செடி தம்பட்டங்காய் சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல்

செடி தம்பட்டங்காய் சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல்

செடி தம்பட்டங்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது: களிமண் நிலத்தில், நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். விளைப்பொருட்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்துகிறேன். அந்த வரிசையில், செடி தம்பட்டங்காயை, பாத்தி முறையில் சாகுபடி செய்துள்ளேன். இந்த செடி தம்பட்டங்காய் நடவு செய்து, 45வது நாளில் பூ பூக்கும். அதன்பின் காய்கள் காய்க்க துவங்கும். அவரைக்காய் போல, அறுவடை செய்ய செய்ய கூடுதல் மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்த செடிகளின் நடுவே புதினா, பொன்னாங்கன்னி உள்ளிட்ட பல விதமான கீரை வகைகளை சாகுபடி செய்துள்ளேன். தம்பட்டங்காய் வருவாய் இல்லாத போது, கீரை சாகுபடி வருவாய்க்கு வழி வகுக்கும். காய்கள் முற்றிவிட்டால், மறு சாகுபடி செய்ய, விதை நேர்த்தி செய்து விற்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - பி.சத்தியபாணி, 93808 57515.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி