உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாற்றங்கால் பசுமை குடில் வல்லம் ஊராட்சியில் சேதம்

நாற்றங்கால் பசுமை குடில் வல்லம் ஊராட்சியில் சேதம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வல்லம் ஊராட்சி உள்ளது. இங்கு, 2021 - -22ம் நிதியாண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களின் கீழ், 2.82 லட்சம் ரூபாய் செலவில், நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் அமைக்கப்பட்டது.இதில், மழை மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து நாற்றுகளை பாதுகாக்க, பசுமை குடிலுக்கு, ‛கிரீன் நெட்' வலை அமைக்கப்பட்டது. இங்கு, முருங்கை, வேம்பு, புங்கன், நாவல் மற்றும் நிழல் தரும் மரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, கிராமத்தின் பிரதான சாலையோரம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் மரம் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.தற்போது, நாற்றாங்கால் பசுமை குடில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பசுமை குடில் வலை கிழிந்து காட்சியளிக்கிறது. இதனால், நாற்றுகள் வெயிலில் கருகும் அவலநிலை உருவாகியுள்ளது.எனவே, நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடிலை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை