மேலும் செய்திகள்
வெட்டப்படும் மரங்கள்; தொடரும் அத்துமீறல்
21-Dec-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பழவேரி கிராமத்தில், 2022 - 2023 நிதியாண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2 லட்சம் ரூபாய் செலவில், நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடில் அமைக்கப்பட்டது.நிழல் மற்றும் பழம் தரக்கூடிய வேம்பு, புங்கன், மா, கொய்யா, நாவல், அத்தி ஆகிய நாற்றுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதை, கிராமத்தின் பிரதான சாலையோரம் உள்ள அரசு புறம்போக்கு நிலம், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் மரங்கள் வளர்ப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.மேலும், மழை மற்றும் வெயில் தாக்கத்திலிருந்து நாற்றுகளை பாதுகாக்க பசுமை வலை குடில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது, நாற்றங்கால் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து, பசுமை குடில் வலை கிழிந்து, கம்பிகள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.எனவே, நாற்றங்கால் வளர்ப்பு பசுமை குடிலை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21-Dec-2024