உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆரம்பாக்கத்தில் சிறுபாலம் சேதம் மழைநீர் வடிவதில் சிக்கல்

ஆரம்பாக்கத்தில் சிறுபாலம் சேதம் மழைநீர் வடிவதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், சாலமங்கலம் அடுத்த, ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து, பிரதான சாலை பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலையின் குறுக்கே, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள சிறுபாலத்தில் ஒரு முனை உடைந்து சேதமடைந்து மண்ணில் புதைந்து உள்ளது. இதனால், மழை காலங்களில் வெள்ளநீர் வெளியேர வழியின்றி, சாலையை துண்டிக்கும் நிலை உள்ளது.எனவே, எதிர்வரும் பருவ மழை காலத்திற்குள்ளாக, சேதமான சிறுபாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ