உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆனைப்பள்ளத்தில் குடிநீர் பைப்லைன் கேட் வால்வு தொட்டியின் சிலாப் சேதம்

ஆனைப்பள்ளத்தில் குடிநீர் பைப்லைன் கேட் வால்வு தொட்டியின் சிலாப் சேதம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக, குடிநீர் சேமிக்கப்பட்டு, பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, ஆனைப்பள்ளம் மேட்டு தெருவில், குடிநீர் பைப்லைன் கேட் வால்வு தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் உள்ள கேட் வால்வு வாயிலாக, ஒவ்வொரு தெருவிற்கும் குடிநீர் ஷிப்ட் அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, குடிநீர் பைப்லைன் கேட் வால்வு தொட்டி முறையான பராமரிப்பு இல்லாமலும், தொட்டியின் மீதுள்ள சிலாப் உடைந்தும் உள்ளது.மேலும், தொட்டி திறந்தபடியே தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த தொட்டி அருகே, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் அடிக்கடி விளையாடி வருகின்றனர்.அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் தொட்டியில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, குடிநீர் பைப்லைன் கேட் வால்வு தொட்டியின் மீதுள்ள, உடைந்த சிலாபை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை