உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான மின் கம்பங்களால் ராமாபுரத்தில் அபாயம்

சேதமான மின் கம்பங்களால் ராமாபுரத்தில் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட, ராமாபுரம் சாலையோரம் சேதமடைந்துள்ள டிரான்ஸ் பார்மர் மின்கம்பங்களால், அப்பகுதியில் வசிப்போர் அச்சத்தில் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, 1வது வார்டு, ராமாபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ராமாபுரத்தில் சாலையோரம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து அப்பகுதி முழுதும் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த டிரான்ஸ்பார்மரின் இரு மின்கம்பங்களும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அடி முதல் உச்சி வரை விரிசல் அடைந்து, கான் கிரீட் பெயர்ந்து நிற்கிறது. காற்று வேகமாக அடித்தாலோ, பலத்த மழை பெய்தாலோ மின்மாற்றி விழும் அபாயம் உள்ளது. சாலையோரம் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை கடந்து தான் மக்கள் சென்று வருகின்றனர். மக்கள் நடமாடும் போது டிரான்ஸ்பார்மர் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி, புதிய மின்கம்பங்கள் அமைக்க, ஸ்ரீபெரும் புதுார் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ