உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் கூழங்கல்சேரியில் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் கூழங்கல்சேரியில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, கூழங்கல்சேரி -- பேரீஞ்சம்பாக்கம் இடையேயான இணைப்பு சாலையில், கைக்கு எட்டும் உயரத்திற்கு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், விபத்து ஏற்படும் நிலை அதிகரித்து உள்ளது. படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் இருந்து, பேரீஞ்சம்பாக்கம் செல்லும் கூழங்கல்சேரி -- பேரீஞ்சம்பாக்கம் இடையேயான இணைப்பு சாலை உள்ளது. பேரீஞ்சம்மாக்கம், கூழங்கல்சேரி, வசந்தம் டவுன்ஷிப் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலை வழியே, ஒரடகம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். பேரீஞ்சம்பாக்கம் -- குழங்கலச்சேரி இணைப்பு சாலை வழியே, வசந்தம் டவுன்ஷிப் குடியிருப்பிற்கு, மின் கம்பங்கள் வழியே மின் கம்பிகள் செல்கின்றன. இந்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. கைக்கு எட்டும் உயரத்திலே மின் கம்பிகள் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மீது உரசி, மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே, தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை