புதிய துணை சுகாதார நிலையம் கம்பராஜபுரத்தில் அமைக்க முடிவு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சுகாதாரத் துறையின் கீழ், கூரம், அவலுார், திருப்புட்குழி, கீழ்பெரமநல்லுார் உள்ளிட்ட ஆறு இடங்களில், துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.இதில், கம்பராஜபுரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என, கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அவலுார், கீழ்பெரமநல்லுார் ஆகிய கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு நீண்ட துாரம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதால், கம்பராஜபுரத்தில் புதிய சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், 15வது மத்திய நிதிக்குழு மானிய நிதியின் கீழ், 41 லட்சம் ரூபாய் மதிப்பில், கம்பராஜபுரத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணி நடைபெற்று வருகிறது. டெண்டர் முடிந்தவுடன் கட்டுமான பணிகள்துவங்க உள்ளன.