உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிணற்றில் விழுந்த மான் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மான் உயிரிழப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, தளவாரம்பூண்டி, பெருங்கோழி, கட்டியாம்பந்தல் ஆகிய பகுதிகளில் காப்பு காடுகள் உள்ளன. இந்த காப்பு காடுகளில் உள்ள புள்ளி மான்கள் காலை மற்றும் மாலை நேரங்களில், இரைத்தேடி வயல்வெளியில் சுற்றித்திரிவது வழக்கம்.இந்நிலையில், புலியூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் புள்ளி மான் ஒன்று நேற்று காலை விழுந்துள்ளது. பின், இறந்த நிலையில் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது.இதை கண்ட அவ்வழியே சென்றவர்கள், உத்திரமேரூர் தீயணைப்பு துறை மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டனர்.இதையடுத்து, வனத்துறையினர் புள்ளி மானை கொண்டு சென்று, அருகிலுள்ள காப்பு காட்டில் அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை