உள்ளூர் செய்திகள்

தவன உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவிலில், மாசி மாதத்தில் மூன்று நாட்கள் நடக்கும் தவன உற்சவம் கடந்த 28ல் துவங்கியது.தவனம் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அழகிய சிங்கபெருமாள் வெங்கடாத்ரி கொண்டையுடன், மலர் அலங்காரத்தில், மங்களகிரியில் எழுந்தருளினார்.இரண்டாம் நாளான 29ல், பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்திலும், முத்துகிரீடத்தில் ஸ்ரீதேவி, பூதேவியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை 10:30 மணிக்கு தாயார், பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தவன அலங்கார சேவையும், இரவு 7:00 மணிக்கு சன்னிதி உள்புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை