குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த வேளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 29. இவரது 3 வயது மகள் சவிக் ஷா, நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாயமானார்.வீட்டை சுற்றியுள்ள பல இடங்களில், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்துள்ளனர். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. வீட்டருகே உள்ள குட்டை நீரில் மூழ்கியிருந்த சிறுமியை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.