உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெருக்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவதால் வாலாஜாபாதில் இடையூறு

தெருக்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவதால் வாலாஜாபாதில் இடையூறு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருவின் பல்வேறு பகுதிகளில் வீடு கட்டி உள்ள குடியிருப்பினர் தங்களது வீடுகளையொட்டிய இருபுற தெரு பகுதிகளையும், ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்துள்ளது.இதனால், தெருக்களின் அளவு குறைந்து குறுகி வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.குறிப்பாக, சீனிவாச பெருமாள் தெரு, வீரராகவ சுபேதர் தெரு, போஜக்காரத் தெரு, முனிசிப் நாராயணசாமி தெரு, சிவன்படை வீதி, வலம்புரி விநாயகர் தெரு, மகிமைதாஸ் தெரு போன்ற தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இத்தெருவினரின் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல இயலாமல் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றன.எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி, தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் சிரமமின்றி சென்று வர, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை