உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாவட்ட ஊராட்சி செயலர் பொறுப்பேற்பு

மாவட்ட ஊராட்சி செயலர் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலராக வேதநாயகம் பணிபுரிந்து வந்தார். அவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலராக கடந்த வாரம் இடமாறுதலில் சென்றார். அவருக்கு பதிலாக, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரகத்தில் உதவி இயக்குநர் அந்தஸ்தில் பணிபுரிந்து வந்த ரூபேஷ்குமார் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி