உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருக்காலிமேடில் நாய் தொல்லை

திருக்காலிமேடில் நாய் தொல்லை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரை சாலை, சாலியர் தெரு, கவரை தெரு, பாலாஜி நகர், உடையார் தெரு உள்ளிட்ட தெருக்களில், 75க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால், தெருக்கள் வழியாக பள்ளி செல்லும் மாணவ - -மாணவியர், பெண்கள், முதியோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.மேலும், இருசக்கர வாகனத்தில் புதிதாக வரும் நபர்களை, நாய்கள் குரைத்தபடியே விரட்டி செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருக்காலிமேடு மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை