உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய் பணி உத்திரமேரூரில் மும்முரம்

வடிகால்வாய் பணி உத்திரமேரூரில் மும்முரம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, 2வது வார்டுக்கு உட்பட்ட மல்லிகாபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களிலே தேங்கி வந்தது.இதனால், அப்பகுதியில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்தது. இதை தவிர்க்க, அப்பகுதியில் வடிகால்வாய் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, 2024 ---- 25ம் நிதி ஆண்டில், 'அயோத்திதாச பண்டிதர்' மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய், சிறுபாலம் மற்றும் கான்கிரீட் சிலாப் ஆகியவை அமைக்கும் பணிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி