கார் கவிழ்ந்து ஓட்டுநர் பலி
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கண்டிகைச் சேர்ந்தவர் கிஷோர், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 4:45 மணிக்கு, உறவினரின் 'டொயோட்டா இன்னோவோ' காரை எடுத்துக் கொண்டு, உத்திரமேரூர் நோக்கி சென்றார்.அப்போது, வயலூர் கூட்ரோடு பகுதியில், சாலையோரமாக நடந்து சென்ற எடிசன், 50, என்பவரின் மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த கிஷோர், எடிசன் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.நேற்று முன்தினம் மாலை கிஷோர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.