உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவருக்கான கல்வி நிகழ்ச்சி

மருத்துவருக்கான கல்வி நிகழ்ச்சி

ஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்தியமருத்துவ சங்கம், இந்திய குழந்தைநல மருத்துவர்கள் கழகம், இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு, சென்னை நியோ லைஃப் குழந்தைகள் மருத்துவமனை சார்பில் மருத்துவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்திய குழந்தை நல மருத்துவர்கள் கழக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் ச.யோகானந்தன் தலைமை வகித்தார்.சிசு நல நிபுணர் டாக்டர் எஸ். ஸ்ரீதர் 'பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சையில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.இந்திய குழந்தை நல மருத்துவர்கள் கழக பொருளாளர் டாக்டர் பெ. வசந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.காஞ்சிபுரம் குழந்தை நல மருத்துவர்கள் கழக தலைவர் டாக்டர் ப. முரளிகிருஷ்ணன் வரவேற்றார். காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை