உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

உத்திரமேரூர்:-சோமநாதபுரத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், முதியவர் உயிரிழந்தார். உத்திரமேரூர் அடுத்த பழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 67. இவர் நேற்று முன்தினம் காலை சோமநாதபுரம் பகுதியில் இருந்து டி.வி.எஸ்.எக்ஸ்எல்., இரு சக்கர வாகனத்தில், உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால்வந்த மாருதி சுசுகி கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சங்கர் காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாலை சங்கர் உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !