உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலர் மீது கார் மோதல் முதியவர் உயிரிழப்பு

டூ - வீலர் மீது கார் மோதல் முதியவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 74. இவர், எலக்ட்ரிகல் இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம் நோக்கி சென்றார். அப்போது, பொன்னியம்மன்பட்டறையில் உள்ள சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது எதிரே வந்த, 'இன்னோவா' கார், திருநாவுக்கரசு சென்ற டூ - வீலர் மீது மோதியது.இதில், திருநாவுக்கரசு பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலுசெட்டிசத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை