உத்திரமேரூர் பணிமனையில் எலக்ட்ரீஷியன் நியமனம்
உத்திரமேரூர்:'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் எலக்ட்ரீஷியன் நியமிக்கப்பட்டுஉள்ளார். உத்திரமேரூரில், அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 38 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக், எலக்ட்ரீஷியன் உட்பட 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன் எலக்ட்ரீஷியன், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், பேருந்துகளுக்கு பேட்டரி மற்றும் விளக்குகளை பராமரிக்க பணியாளர் இல்லாமல் சிரமம் ஏற்பட்டது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு புதிதாக எலக்ட்ரீஷியன் நியமிக்கப்பட்டுள்ளார்.