உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய் தளம் சீரமைக்க வலியுறுத்தல்

வடிகால்வாய் தளம் சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, வந்தவாசி செல்லும் சாலை வழியாக பங்களாமேடு, வேடபாளையம், களியாம்பூண்டி, காரணை, பெருநகர், மானாம்பதி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பங்களாமேடு மற்றும் வேடபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் தளம் சேதம்அடைந்து உடைந்துள்ளது.இதனால், சாலையோரம் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நிலைதடு மாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை