வரும் 20ல் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், பெரிய அளவில் மற்றும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது.தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளன. பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.