பி.டி.ஓ., அலுவலகத்தில் செடிகள் அகற்ற எதிர்பார்ப்பு
உத்திரமேரூர், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், வட்டார வள மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.இந்த அலுவலகங்களுக்கு சுற்றுவட்டார கிரா மத்தைச் சேர்ந்தோர், பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வளாகத்தில் உள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக பின்புறம் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. அப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இதனால், அலுவலக வளாகத்திற்குள் வருவோர், அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.எனவே, உத்திரமேரூர்வட்டார வளர்ச்சிஅலுவலக வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.