மேலும் செய்திகள்
சாலையில் மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறு
03-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் முறிந்து விழுந்துள்ள புங்கன் மரக்கிளையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெரு வழியாக பல்லவர்மேடு, ஆவா குட்டை, தாயார்குளம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையோரம் உள்ள புங்கன் மரத்தின் கிளை, சில நாட்களுக்கு முன் மழை பெய்தபோது முறிந்து விழுந்தது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் முறிந்து விழுந்துள்ள புங்கன் மரக்கிளையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
03-Sep-2025