உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழவேரி ஏரியில் மண் கடத்தல்: விவசாயிகள் குற்றச்சாட்டு

பழவேரி ஏரியில் மண் கடத்தல்: விவசாயிகள் குற்றச்சாட்டு

உத்திரமேரூர்:பழவேரி ஏரியில் மண் கடத்தப்பட்டு வருவது குறித்து, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, பழவேரி கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 100 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தி, 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், பழவேரி ஏரியில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு, டிரா க் டரில் கடத்தப்படு கிறது. ஏரியில் மண் அள்ள எந்தவித அனுமதியும் இல்லாத நிலையில், மண் கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. புதிய சாலை அமைப்பதற்கும், செங்கல் சூளைகளுக்கும் ஏரி மண் கடத்தப்படுவதாக, விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஏரியில் மண் கடத்தல் தொடர்ந்தால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயமும் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பழவேரி ஏரியில் மண் கடத்தல் நடப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பழவேரி ஏரியை நம்பி 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஏரியில் மண் அள்ளப்பட்டு கடத்தப்படுவதால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏரியில் மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து உத்திரமேரூர் நீர்வளத் துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது: பழவேரி ஏரியில் மண் அள்ள எந்த அனுமதியும், யாருக்கும் வழங்கப்படவி ல்லை. சட்டத்திற்கு புறம்பாக சிலர் டிராக்டரில் மண் திருடிச் செல்வதாக புகார்கள் வந்து உள்ளன. மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, உரிய நடவடிக் கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ