உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொங்கும் மின் ஒயரால் விவசாயிகள் அச்சம்

தொங்கும் மின் ஒயரால் விவசாயிகள் அச்சம்

வாலாஜாபாத்: கிதிரிப்பேட்டையில் விவசாய நிலங்களில் மின் ஒயர்கள் தாழ்வாக தொங்குவதால் பணி மேற்கொள்ள விவசாயிகள் அச்சப்படும் நிலை உள்ளது. வாலாஜாபாத் ஒன்றி யத்திற்கு உட்பட்ட கிதிரிப்பேட்டை பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தங்களது நிலங்களுக்கு காலையில் செல்லும் விவசாயிகள் மாலை வரை தொடர்ந்து பல்வேறு பணிகள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இப்பகுதி விவசாய நிலங்கள் வழியாக பாசனத்திற்கு மின் மோட்டார் இணைப்புக்கு பொருத்தப்பட்டுள்ள மின் ஒயர்கள் விவசாய நிலங்களில் தாழ்வாக தொங்குகிறது. மேலும், தொங்கும் மின் ஒயர்களால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என, ஒருவித அச்சத்தோடு பணி செய்யும் நிலை உள்ளது. எனவே, கிதிரிப்பேட்டை விவசாய நிலங்களில் தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ