உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் விலை குறைவால்விவசாயிகள் கவலை

நெல் விலை குறைவால்விவசாயிகள் கவலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் சம்பா பட்டத்தை தொடர்ந்து, தற்போது நவரை பட்டத்திற்கான சாகுபடி பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.சம்பா பருவத்திற்கு உத்திரமேரூர் வட்டாரத்தில் மட்டும் 27,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் முன் பட்டத்தில் சாகுபடி செய்த நெல் பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.அறுவடையான நெல்லை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாய நிலங்களுக்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.இதுகுறித்து, உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:சம்பா பருவத்திற்கு சாகுபடி செய்த குண்டு ரக நெல்லை அறுவடை செய்துள்ளோம். 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை குண்டு நெல், 1,500 ரூபாய்க்கு விலை போகிறது.இது கட்டுப்படியான விலையாக உள்ளது. எனவே, இந்த ஆண்டுக்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டை விரைவாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ