விவசாயிகள் கலந்தாய்வு முகாம்
காஞ்சிபுரம்:'உழவரை தேடி வேளாண்மை - -உழவர் நலத்துறை' திட்ட விவசாயிகளுக்கான கலந்தாய்வு முகாம் நேற்று கோவிந்தவாடி ஊராட்சியில் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சி கம்மவார்பாளையம் துணை கிராமத்தில், 'உழவரை தேடி வேளாண்-மை - உழவர் நலத்துறை' திட்ட முகாமிற்கு, பரந்துார் துணை வேளாண் அலுவலர் மகாதேவன் தலைமை வகித்தார்.அவர், வேளாண் துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கால்நடை துறையில் செயல்படுத்தும் திட்டம் குறித்து, கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவர் லட்சுமிபதி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.அதேபோல, தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து, கோவிந்தவாடி குறு வட்ட தோட்டக்கலை உதவி அலுவலர் தேவராஜ் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண் துறை சார்ந்த பிற துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.