உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 102 ஏரிகள் 50 சதவீதம்கூட நிரம்பாததால் விவசாயிகள் ஏமாற்றம்

102 ஏரிகள் 50 சதவீதம்கூட நிரம்பாததால் விவசாயிகள் ஏமாற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 102 ஏரிகள் 50 சதவீதம்கூட நிரம்பாததால், விவசாயிகள் ஏமாற்றம் அைடந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக, வேகவதி, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பாசனத்துக்கு பயன்படும் ஏரிகளுக்கு, வரத்து கால்வாய் வாயிலாக தண்ணீர் வராததால், பல ஏரிகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தற்போது வரை 60 சதவீதத்திற்கு மேலாக இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்துள்ளது. இருப்பினும், பல ஏரிகள் 50 சதவீதம் கூட நிரம்பாதது, விவசாயிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. அதில், 81 ஏரிகள் மட்டுமே முழுமையாக 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மீதமுள்ள ஏரிகளில், 56 ஏரிகள் 75 சதவீதமும், 142 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன. ஆனால், 102 ஏரிகள் 50 சதவீதம் கூட நிரம்பாமல், அதற்கும் குறைவாக நிரம்பி உள்ளன. மொத்தமுள்ள ஏரிகளில், மூன்றில் ஒரு பங்கு ஏரிகள் 50 சதவீதம் கூட நிரம்பாததற்கு, வரத்து கால்வாய்களின் நிலை மோசமாக இருப்பதே காரணம் என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். வரத்து கால்வாய்களை சீரமைத்து இருந்தாலே, ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ