உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இலவச மரக்கன்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இலவச மரக்கன்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு

உத்திரமேரூர்:தமிழக வனத்துறை, உத்திரமேரூர் வனச்சரகம் வாயிலாக, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ், உத்திரமேரூரில் நாற்றங்கால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்த நாற்றங்கால் பகுதியில், செங்கல்பட்டு சமூக வனக்கோட்டம் சார்பில், தேக்கு, செம்மரம், வேங்கன், புங்கன், நாவல், பாதாம் உள்ளிட்ட ஓராண்டு வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.இந்த மரக்கன்றுகளை விவசாயிகள் தங்களது நிலங்களில் ஊடு பயிராகவும், வரப்பு ஓரங்களிலும் வைத்து பராமரிக்க, ஏக்கருக்கு, 500 மரக்கன்றுகள் வீதம், இலவசமாக வழங்கப்படுகின்றன.விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் நிலத்திற்கான பட்டா நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனை அருகே உள்ள வனச்சரகம் அலுவலகத்தில் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, 95516 92727 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ