உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயிரி உரங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

உயிரி உரங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

உத்திரமேரூர், விவசாய விளைநிலங்களில், வேதி உரங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து மண் வளத்தை காக்க, வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அதன்படி, உத்திரமேரூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நெல், பயறு, நிலக்கடலை, தென்னை, கரும்பு ஆகியவற்றுக்கு தேவையான உயிரிஉரங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, உதவி வேளாண் இயக்குனர் முத்து லட்சுமி கூறியதாவது:தற்போது உயிரி உரங்கள்நெல்லுக்கு 7 டன்னும், பயறு வகைகளுக்கு 250 டன்னும், நிலக்கடலைக்கு 2 டன்னும் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயிரி உரங்களை பெற, வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ