மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு 3 நாள் இலவச பயிற்சி
10-Sep-2025
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி
29-Sep-2025
காஞ்சிபுரம்;விவசாயிகளுக்கு மானியம் மற்றும் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம் வாலாஜாபாதில் நேற்று நடந்தது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, நவீன வேளாண் கருவிகள்' குறித்த பயிற்சி கூட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில்,, வி.எஸ்.டி., பவர் டில்லர் மற்றும் வி.எஸ்.டி., பவர் வீடர் ஆகிய இயந்திரங்களை எவ்வாறு பயன் படுத்துவது. இதன் மூலம் உற்பத்தித்திறனை எவ்வாறு அதிகரிப்பது என, விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் மற்றும் வங்கி மூலம் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற விவசாயிகள் தங்களின் சந்தேகங்கள் கேட்டு அறிந்தனர். இந்நிகழ்ச்சியில், வி.எஸ்.டி., பவர் வீடர் 10க்கு மேற்பட்ட இயந்திரங்கள் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வி.எஸ்.டி., பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் அங்கீகரிக்கப்பட்ட டீலர் வாலாஜாபாத் காமாட்சி விவசாய மையத்தினர் செய்திருந்தனர்.
10-Sep-2025
29-Sep-2025