விவசாயிகள் டிராக்டர் பேரணி
காஞ்சிபுரம்:விளைபொருட்களை சந்தைபடுத்தலுக்கு, புதிய கொள்கை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில், நேற்று துவங்கிய பேரணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். டிராக்டர் பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது.