உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மது போதையில் தினமும் தகராறு மகனை அடித்து கொன்ற தந்தை கைது

மது போதையில் தினமும் தகராறு மகனை அடித்து கொன்ற தந்தை கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிச்சத்திரம் அருகேயுள்ளது புதுப்பாக்கம் கிராமம். இங்குள்ள பொது குளத்தில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதை, கிராம மக்கள் நேற்று முன்தினம் பார்த்துள்ளனர். தகவலறிந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் ஆகியோரும் நேரில் சென்று விசாரித்தனர்.குளத்தில் மிதந்த சடலத்தை போலீசார் மீட்டபோது, தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன், இடுப்பில் கல் ஒன்று கட்டப்பட்டு குளத்தில் சடலம் வீசப்பட்டிருப்பது தெரிந்தது. கொலை செய்யப்பட்ட நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி,35. என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், அவரது தந்தை காத்தவராயன், 60, மற்றும் மாமா ராஜேஷ், 40. ஆகிய இருவரும் முனுசாமியை கட்டையால் அடித்து கொலை செய்து, கல்லை கட்டி குளத்தில் வீசியுள்ளனர். இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது :மது போதைக்கு அடிமையான முனுசாமி, வீட்டில் எப்போதும் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால், இவரது மனைவியும் பிரிந்து தாய் வீட்டில் வசிக்கிறார். மனைவி பிரிந்து சென்ற நிலையில், வீட்டில் வசிக்கும் தந்தை காத்தவராயன் மற்றும் தாய் முனியம்மாள் ஆகியோரிடம் தினமும் பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த முனுசாமி, தாய், தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இதனால், வெறுப்படைந்த தந்தை காத்தவராயன் கட்டையால் மகன் முனுசாமியை தலை உள்ளிட்ட இடங்களில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த முனுசாமி இறந்தார். சடலத்தை மறைக்க, தன் மனைவியின் சகோதரனான ராஜேஷ் என்பவரை துணைக்கு அழைத்த காத்தவராயன், இருவரும் சடலத்தை குளத்தில் போட்டு மறைத்துள்ளனர். இருவரும் கொலை செய்ததை ஒப்பு கொண்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி