உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவால் நோய் தொற்று அச்சம்

சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவால் நோய் தொற்று அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலைகளை இணைக்கு எறையூர் பிரதான சாலையில் வழியே தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.எறையூர் கிராமவாசிகள் இந்த சாலையை வழியே, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில், எறையூர் பகுதியில் இயங்கிவரும் கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும், கோழி இறகு மற்றும் கழிவை இந்த சாலையோரம் கொட்டி வருகிறனர்.இதனால், சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், வாகன ஓட்டிகள் தொற்று நோய் பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.மேலும், கோழி இறகுகள் காற்றில் பறந்து கண்களில் விழுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, இந்த சாலையோரம் கோழி இறைச்சி கழிவை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை