உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 2 ஆண்டு

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 2 ஆண்டு

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பூதேரிபண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தங்கையின் மகள் செல்வி என்பவரின் திருமணத்திற்கு, மூவலுார் ராமாமிர்தம் அம்மாள் திருமண திட்டத்தில் உதவித்தொகை கேட்டு, 2008ல் விண்ணப்பம் செய்தார்.இந்த மனு சம்பந்தமாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றிய ஊரக நல அலுவலர் சிவகாமி, 67, என்பவரை அணுகிய போது, 'மனு மீது நடவடிக்கை எடுக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்' என்றார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன், லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, 2008 டிசம்பர் 19ம் தேதி, லஞ்சப்பணம் 1,000 ரூபாய் வாங்கியபோது, சிவகாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில், சிவகாமி மீது இறுதி குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி வசந்தகுமார் முன் விசாரணை முடிந்து, சிவகாமிக்கு இரு பிரிவுகளில், தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவிட்டார். மேலும், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ