உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் டாக்டர். எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடக்க உள்ளது. இதுகுறித்து முதல்வர் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உத்திரமேரூரில் டாக்டர்.எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, நடப்பாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. அதன்படி, மே 27, ஜூன் 12, 23 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில், 760 மாணவர் சேர்க்கை இடங்களில் 446 மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது கூடுதலாக 20 சதவீதம் இடங்கள் உயர்த்தப்பட்டு, மொத்தம் 370 இடங்களுக்கு நாளை இறுதி கட்ட மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதில், பி.எஸ்.சி., பி.ஏ., மற்றும் பி.காம்., பட்டப்படிப்புகளில் உள்ள கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், தமிழ், ஆங்கிலம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ