மேலும் செய்திகள்
'கேரி பேக்' பயன்படுத்திய7 கடைகளுக்கு அபராதம்
15-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட,இடையம்புதுார், கிளக்காடி ஆகிய பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, சுகா தாரத் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள்வந்தன.அதன்படி, உத்திரமேரூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஏசுதாஸ் தலைமையிலான சுகாதார துறையினர், அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா ஆகிய பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.தொடர்ந்து, குட்கா பொருட்களை விற்ற இரண்டு கடைகளுக்கு 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.இதில், சுகாதார மேற்பார்வையாளர்கள் சந்தோஷ்குமார், லோகநாதன் மற்றும் பலர்உடனிருந்தனர்.
15-Mar-2025