உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குக்கர் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருட்கள் நாசம்

குக்கர் தொழிற்சாலையில் தீ: பல லட்சம் பொருட்கள் நாசம்

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, நேற்று அதிகாலையில் குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. ஒரகடம் அருகே, வல்லம் -வடகால் சிப்காட் தொழிற்பூங்காவில், 'ஜெ.பி. என்டர்பிரைசஸ்' எனும் சமையல் பாத்திரங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தொழிற்சாலையில் திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், படப்பை உள்ளிட்ட தீயணைப்பு துறையினரும், டைம்ளர், நிசான் உட்பட நான்கு தனியார் தீயணைப்பு வாகனங்கள் உட்பட ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில், தொழிற்சாலை இயந்திரங்கள், ஜெனரேட்டர், குக்கர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி