உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செல்ல முன்னாள் தலைமை நீதிபதி அறிவுரை

கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செல்ல முன்னாள் தலைமை நீதிபதி அறிவுரை

காஞ்சிபுரம்:'கோவிலுக்குச் செல்லும்போது, பாரம்பரிய உடையணிந்து செல்ல வேண்டும்' என, மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன் பேசினார்.காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், சுக்ல யஜூர் வேத பாடசாலையில், யோகீஸ்வர மகரிஷியின், 115வது ஜெயந்தி மகோத்சவம் நவ.,7ம் தேதி துவங்கி நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது.யோகீஸ்வர சுவாமிக்கு கலசாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, வேதம் மற்றும் தேசிய திறந்தவெளி பல்கலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன் சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில் வைத்தியநாதன் பேசியதாவது:பண்பாடு, கலாசாரம், ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவை வேதம் கற்றுத் தருகின்றன. கோவிலுக்கு செல்லும் போது, பாரம்பரிய உடையணிந்து செல்ல வேண்டும். கேரளா மாநிலத்தில், பாரம்பரிய உடை அணிந்து, கோவிலுக்கு செல்வது கட்டாயமாக உள்ளது.அதேபோல, தமிழக கோவில்களிலும் கொண்டு வர வேண்டும். பாரம்பரிய உடை நன்மை குறித்து இளைய சமுதாயத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். வெளிநாடு சென்றாலும், நம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வேத பாடசாலை தலைவர் கணபதி மற்றும் சமஸ்கிருத பாட ஆசிரியர்கள் ரங்கநாதன், சுதர்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி