உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முன்னாள் கல்லுாரி மாணவியர் கீழம்பியில் சந்திப்பு கூட்டம்

முன்னாள் கல்லுாரி மாணவியர் கீழம்பியில் சந்திப்பு கூட்டம்

கீழம்பி,; காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள எஸ்.எஸ்.கே.வி. கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி உள்ளது.இக்கல்லுாரியில், 2010ம் ஆண்டு முதல், 2024 வரை பயின்ற முன்னாள் மாணவியர்சந்திப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. வணிக நிர்வாக தலைவர் முனைவர் ரேவதி வரவேற்றார். எஸ்.எஸ்.கே.வி., கல்வி குழுமத்தின் செயலர் முனைவர் சி.கே.ராமன் தலைமை வகித்தார்.கல்லுாரி முதன்மையர் முனைவர் ராசகோபாலன் முன்னிலை வகித்தார். இதில், எஸ்.எஸ்.கே.வி. கல்வி குழும நிர்வாகிகள், முதல்வர் முனைவர் திருமாமகள், கல்வி ஆலோசகர் முருகேசன், கல்லுாரித் துறை தலைவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவியர், கல்லுாரியில் தாங்கள் பயின்றபோது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும், தங்களுக்கு பாடம் நடத்திய பேராசிரியர்களையும் நினைவுகூர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி