மேலும் செய்திகள்
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
20-Aug-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத், ஜோதி கன்னியம்மன் கோவில் தெரு நீர்வரத்து கால்வாய் கரையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய், வாலாஜாபாத் பேரூராட்சியின் பல்வேறு தெருக்கள் வழியாக செல்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஜோதி கன்னியம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மற்றும் கால்வாய் கரை மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். இந்த குப்பையின் கழிவுகளில் காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகளும் கலந்திருப்பதால் அழுகலாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அச்சாலை வழியாக நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் இந்த குப்பைகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Aug-2025